மேலும் செய்திகள்
ஆண்டு விழா...
10-Mar-2025
சிவகங்கை: சொக்கநாதபுரம் அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் புகழேந்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா, துணை தலைவர் அழகுராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளீஸ்வரி பங்கேற்றனர்.ஆசிரியர் கணேசன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் சிந்தாமணி, சகுந்தலா, விஜயலட்சுமிஒருங்கிணைத்தனர். ஆசிரியர் ஜேம்ஸ்குமார் நன்றி கூறினார்.* திருப்புத்துார் ஊ.ஒ. மாங்குடி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.தேவகோட்டை டி.இ.ஓ. செந்தில்குமரன்தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமார், சாந்தி,கிராம தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மார்கரெட் சாந்தகுமாரி வரவேற்றார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் சித்ரா, அன்சர்பானு, குமாரி அமலிஜாய், சுகந்தி, அருள் சந்தோஷம், ஆசிரியர் மார்ஷல், நிறைமதி ஒருங்கிணைத்தனர்.* சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார். செயலாளர் நடேசன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். இணை இயக்குனர் ஊரக நலப் பணிகள் நிர்வாக அலுவலர் முத்துச்சாமி, கனரா வங்கி கிளை மேலாளர் ரம்யா பங்கேற்றனர். கவுன்சிலர் பாக்கியலட்சுமி விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமலட்சுமி, தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பேசினர். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
10-Mar-2025