அறிவியல் மாநாடு
சிவகங்கை: காளையார்கோவிலில் 32வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. கிளை செயலாளர் அலெக்சாண்டர்துரை வரவேற்றார். 280 மாணவர்கள் 130 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விஞ்ஞானி சதீஷ் நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்று தலைப்பில் மாணவர்களிடம் பேசினார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாநிலத் துணைத்தலைவர் காந்தி, கிளைத்தலைவர்கள் வீரபாண்டி, விக்டர், மணவாளன் முத்துராமசாமி கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சாஸ்தாசுந்தரம் நன்றி கூறினார்.