அறிவியல் கண்காட்சி
சிவகங்கை: சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் சிவசீலா வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் முகமது காசிம் வாழ்த்துரை வழங்கினார்.சிறந்த படைப்புகள் வழங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சாஸ்தா சுந்தரம், வீரசின்னம்மாள், ஆரோக்கியமேரி, சித்ரா, முத்துலட்சுமி பங்கேற்றனர்.