மேலும் செய்திகள்
அறிவியல் இயக்க விளக்க கூட்டம்
01-Nov-2025
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பாபா அமீர்பாதூஷா மெட்ரிக் பள்ளியில் நடந்த மாநாட்டில் நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை சமர் பித்தனர். இதில், 45 பள்ளிகளை சேர்ந்த 144 மாணவர் பங்கேற்றனர். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் பாபா அமீர் பாதூஷா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முத்துலட்சுமி, பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் பிரபு, கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், கணேசன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சான்று வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, மெகர்பானு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிளை செயலர் சேகர் நன்றி கூறினார்.
01-Nov-2025