கிரிக்கெட் அணிக்கு தேர்வு
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி மாணவர், தேசிய சி.பி.எஸ்.இ., கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். தேசிய அளவில் சி.பி.எஸ்.இ., கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்கான, தென் மண்டல அணிக்கான தேர்வு சென்னையில் நடந்தது. இதில், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு மாணவர் கைலாஷ் சிறந்த ஆட்டத்தால் தேசிய அணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா தென் மண்டல அணி சார்பில் உத்தரப்பிரதேசத்தில் செப். 15 முதல் 25 வரை நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார். மாணவரை பள்ளி தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குனர் சங்கீதா, பள்ளி கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் சந்திர சுப்பிரமணியன், துணை முதல்வர் சுபாஷினி பாராட்டினர்.