உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிள்ளையார்பட்டி 4 வழிச்சாலை இழுபறியில் சர்வீஸ் ரோடு பணி

 பிள்ளையார்பட்டி 4 வழிச்சாலை இழுபறியில் சர்வீஸ் ரோடு பணி

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி அருகே மேலூர் -- காரைக்குடி 4 வழிச்சாலையில் சர்வீஸ் ரோட்டை விரைவுபடுத்தவும், கண்மாய் பகுதியில் தடுப்பு சுவரை உயர்த்தவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலூரிலிருந்து திருப்புத்தூர் வழியாக காரைக்குடிக்கு 4 வழி சாலை பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த ரோடு பிள்ளையார்பட்டியை அடுத்து பிரிந்து தஞ்சாவூர் கைக்குறிச்சிக்கு தனியாக 4 வழிச்சாலை அமைக்க சர்வே பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் செல்ல வசதியாக சர்வீஸ் ரோடு மருதங்குடி ரோட்டில் இணைக்கப்படுகிறது. அப்பகுதி கண்மாய் நீர் பிடிப்பு பகுதி என்பதால் சர்வீஸ் ரோட்டின் ஒரு புறம் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் உயரம் குறைவாக இருப்பதால் கனத்த மழை பெய்தால் சர்வீஸ் ரோட்டை நீர் மூழ்கடிக்கும் வாய்ப்புள்ளது. பிள்ளையார்பட்டியிலிருந்து மருதங்குடி செல்ல 4 வழிச்சாலையில் குறுக்காக வாகனங்கள் கடந்து செல்கின்றன. முழுமையடையாத நிலையிலும் 4 வழிச் சாலையிலும் போக்குவரத்து உள்ளதால் வாகனங்கள் மோதும் அபாயம் காணப்படுகிறது. குறிப்பாக இரவில் இப்பகுதியை கடந்து செல்வது ஆபத்தானதாக உள்ளது. இதனால் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் கண்மாய் பகுதியில் உயரமான தடுப்புச்சுவர் அமைக்கவும், மருதங்குடிக்கு 4 வழி சாலை பாலத்தின் கீழ் செல்லும் நேரடி ரோடு வசதியை விரைவுபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை