உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கால்நடை பண்ணையில் நாட்டின மாடுகளுக்கு தட்டுப்பாடு

கால்நடை பண்ணையில் நாட்டின மாடுகளுக்கு தட்டுப்பாடு

தமிழகத்தில் புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சாத்துார், ஊட்டி, ஓசூர், திருவாரூர் உட்பட 12 இடங்களில் கால்நடை பண்ணைகள் செயல்படுகின்றன.சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செட்டிநாட்டில் மாவட்ட கால்நடை பண்ணை செயல்பட்டு வருகிறது. 1957ல் 1907 ஏக்கரில் தொடங்கப்பட்ட கால்நடை பண்ணை மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பால், முட்டை விற்கப்படுவதோடு நிர்ணய விலையில் மாடுகள், ஆடுகள், பன்றிகள், கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது.

கால்நடைகள் வளர்ப்பு

செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில், உம்பளாச்சேரி, ஆலம்பாடி பர்கூர், காங்கேயம், புலிக்குளம் மற்றும் முர்ரா எருமை வகை என நாட்டின மாடுகள் இருந்தன. ராமநாதபுரம் வெள்ளை ஆடுகள் ஜமுனாபாரி வெள்ளாடு, லார்ஜ் ஒயிட் ஆடு வகைகள் இருந்தன. பன்றிகளில் யார்க்சயர் எனும் பன்றி இனம் இருந்தது. கோழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டன.கால்நடைகளை பராமரிக்க, கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், மேஸ்திரிகள், மந்தைக்காப்பாளர், தவிர தினக்கூலி வேலையாட்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர். தவிர கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்களும் வளர்க்கப்படுகிறது.

குறைந்த நாட்டின மாடுகள்

செட்டிநாடு கால்நடை பண்ணையில் நாட்டின மாடுகளை பெறுவது இன்று விவசாயிகளுக்கு சவாலாக மாறி உள்ளது.பல வகையான நாட்டின மாடுகள், பராமரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே ஒரு நாட்டின மாடே வழங்கப்படுகிறது.தவிர மேய்ச்சலின் போது, நாட்டின மாடுகள் கலப்பின மாடுகளுடன் கலப்பதால் தரமான நாட்டு மாடுகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின மாடுகள் பெற பதிவு செய்து பல மாதங்களாக காத்திருக்க வேண்டியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அதிகாரிகள் தெரிவிக்கையில்: கால்நடை பண்ணைகளில் பலவகையான நாட்டின மாடுகள் வளர்க்கப்பட்டது.தற்போது, அந்தந்த கால்நடை பண்ணைகளுக்கு என குறிப்பிட்ட நாட்டின மாடுகளே வழங்கப்படுகிறது. செட்டிநாடு கால்நடை பண்ணையில், சாகிவால் தார்பார்க்கர் மாடுகள் இருந்தது.சாகிவால் வகை மாடுகள் மீது எழுந்த புகாரால் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. தார்பார்க்கர் மட்டுமே அதிக அளவில் உள்ளது. ஆண்டுதோறும் கால்நடைகள் ஏலம் நடைபெறும். இதில், கோசாலைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தவிர, மாடுகள் வேண்டி பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்பதிவு அடிப்படையில் முறையாக மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை