உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பற்றாக்குறை

 அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பற்றாக்குறை

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருந்தாளுனர் பற்றாக்குறையால் மருந்து வழங்கும் இடத்தில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு காலை 7:30 முதல் மதியம் 12:30 மணி வரை செயல்படுகிறது. இங்கு பொது மருத்துவம், குழந்தைகள், எலும்பு முறிவு, பல், காதுமூக்கு தொண்டை உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது. தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். புற நோயாளிகள் பிரிவில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக மருந்து வழங்கும் இடமும், முதல் தளத்தில் ஒரு மருந்து வழங்கும் இடம் என 3 மருந்து வழங்கும் இடம் உள்ளது. தாய்வார்டில் மதியம் 12:30 மணிக்கு மேல் ஒரு மருந்து வழங்கும் இடம் உள்ளது. மருந்தாளுனர்கள் 14 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் 8 பேர் தான் பணிபுரிகின்றனர். 6 பேர் பணியிடம் காலியாக உள்ளது. தினசரி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தேவையான மருந்து வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை