சிக்ரி நிறுவன நாள் விழா
காரைக்குடி: காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் சிக்ரியில், 84வது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிக்ரி இயக்குனர் க. ரமேஷா தலைமையேற்றார். திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ஞா.அகிலா ஆண்டு அறிக்கை வெளியிட்டதோடு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மும்பை எல் அண்ட் டி கிரீன் எனர்ஜி தொழில்நுட்ப தலைவர் சூர்யா மொகந்தி ஓய்வு பெற்ற பணியாளர்களை கவுரவித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை விஞ்ஞானி மதியரசு வரவேற்றார். சிக்ரி நிர்வாக அதிகாரி அருண் மணிகண்ட பாரதி நன்றி கூறினார்.