உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் இறப்பு

தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் இறப்பு

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மூச்சு திணறலால் இறந்த தம்பியை பார்த்து அழுதபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அவரது அக்காவும் உயிரிழந்தார். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளம் கிருஷ்ணன் மகன் மருதன் 49. வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். ஏப். 2 இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தில், மருதன் உயிரிழந்தார். நாடார்வேங்கைபட்டியில் வசிக்கும் அவரது அக்கா புஷ்பம் 52, தம்பியின் இறப்பிற்கு வந்திருந்தார்.தம்பியின் உடலை பார்த்து அழுதபோது, அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். மருதனுடன் இரு அண்ணன், 2 அக்கா உடன் பிறந்தவர்கள். மூத்த அக்கா தான் புஷ்பம். சிறுவயதில் தந்தையை இழந்த மருதனை, அக்காதான் வளர்த்துள்ளார். பாசத்தோடு வளர்த்த தம்பியின் இறப்பை தாங்கி கொள்ள முடியாத நிலையில் உயிரிழந்தார். இருவரது உடலும் அவரவர் வசித்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை