உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை இரட்டை கொலை முக்கிய குற்றவாளி கைது

சிவகங்கை இரட்டை கொலை முக்கிய குற்றவாளி கைது

சிவகங்கை:சிவகங்கையில் தீபாவளியன்று நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அருகே வாணியங்குடியை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40, ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50. இவர்கள் மூவரும் அக்., 31 அன்று மாலை 5:00 மணிக்கு கீழவாணியங்குடி கண்மாய் கரை அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரு டூவீலர்களில் சென்ற 6 பேர் கும்பல் மூவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.இதில் மணிகண்டன் சம்பவயிடத்தில் பலியானார். அன்றிரவு 7:00 மணிக்கு களத்துார் சிங்கம் மனைவி லட்சுமியை 60, ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினர். இரு கொலைகளிலும் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கின்றனர். எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.தனிப்படையினர் மணிகண்டன் கொலையில் தொடர்புடைய 7 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று இரு கொலைகளிலும் தொடர்புடைய கீழக்குளத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் தவம் என்ற முத்துராமலிங்கத்தை தனிப்படையினர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி