உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊருணியில் கொட்டப்படும் மருத்துவமனை குப்பை

ஊருணியில் கொட்டப்படும் மருத்துவமனை குப்பை

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஊருணியில் மருத்துவமனை குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதுப்பள்ளம் ஊருணி உள்ளது. இந்த ஊருணி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ள நிலையில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சிலர் ஊருணி கரையில் கொட்டி வருகின்றனர்.இதனால் ஊருணியின் பரப்பு சுருங்கி வருகிறது. மருத்துவமனையில் சேரும் குப்பைகளையும் ஊருணிகரையில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகளால் மாணவர்களுக்கு சுகாதார பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இங்கு குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், ஊருணி கரைகளை சுகாதாரமாக வைத்திருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி