மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
சிவகங்கை : ''ரோட்டோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 'டிஜிடல் பேனர்'களை உடனடியாக அகற்ற,'' கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார். போக்குவரத்து குறித்த ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசுகையில்,''போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை கண்டறிந்து, நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அடிக்கடி விபத்து நிகழும் இடங்களில் 'சென்டர் மீடியேட்டர்', முக்கிய இடங்களில் 'சிக்னல்' , 'கேமரா' பொருத்தி கண்காணித்தால், விபத்தை தவிர்க்கலாம். இது குறித்த விபரத்தை தாக்கல் செய்யவேண்டும். அரசியல் கட்சியினர், தனியார் நிகழ்ச்சிக்காக ரோட்டோரங்களில் 'டிஜிடல் பேனர்'களை வைப்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி பகுதியில் கமிஷனர் அனுமதி பெற்று, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே 'பேனர்' வைக்கவேண்டும்,''என்றார். கூடுதல் எஸ்.பி., கண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார், டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை துறை) கணேசன், உதவி பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago