உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தலைமை ஆசிரியை தாலி செயின் பறிப்பு

தலைமை ஆசிரியை தாலி செயின் பறிப்பு

காரைக்குடி : காரைக்குடி அருகே பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற தலைமை ஆசிரியை கன்னத்தில் தாக்கி கீழே தள்ளி ஆறரை பவுன் தாலி செயினை பறித்து பைக்கில் தப்பிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பாரதிநகர், அதியமான் 4வது குறுக்கு தெரு ராமநாதன் மனைவி அங்கையற்கண்ணி, 45. புதுக்கோட்டை மாவட்டம் கைலாசபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். செப்.20ம் தேதி, பணி முடிந்து இரவு 8 மணிக்கு காரைக்குடி ஸ்ரீராம் நகரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த இருவர் வீட்டருகே சென்ற அங்கையற்கண்ணியை வழிமறித்து கன்னத்தில் தாக்கி கீழே தள்ளி கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தாலி செயினை பறித்து தப்பியோடினர். காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு அம்பலவாணன் விசாரிக்கின்றனர். தொடர் திருட்டு: கடந்த ஒரு வாரத்திற்கு முன் அருணா நகரில் பைக்கில் சென்ற பெண் வக்கீலிடம் 6 பவுன், சில நாட்களுக்கு முன் பாரதி நகரில் பைக்கில் சென்ற ஒரு ஆசிரியையிடம் 4.5 பவுன் செயின் என அடுத்தடுத்து நான்கு வழிப்பறி சம்பவங்கள் சம்பவங்கள் அரங்கேறின. தொடர் சம்பவங்களால், காரைக்குடி மக்கள் பீதியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ