உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 2400 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு: உரிமையாளர்கள் அறிவிப்பு

2400 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு: உரிமையாளர்கள் அறிவிப்பு

சிவகங்கை : 'டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நள்ளிரவு முதல் நடக்க உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தில், சிவகங்கையை சேர்ந்த 2,400 லாரிகளும் பங்கேற்கும்,' என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கவரியை ஒரே மாதிரியாக வசூலிக்க வேண்டும். லாரி உதிரி பாகங்களின் விலையை குறைக்க வலியுறுத்தி, ஆக.,18 நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இப்போராட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட லாரிகள் 'ஸ்டிரைக்கில்' பங்கேற்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.கலெக்டர் ராஜாராமன் தலைமையில், லாரி உரிமையாளர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மருந்து, உணவு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்க கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.இது குறித்து காரைக்குடி லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தன் கூறுகையில்,'' அத்தியாவசிய பொருட்கள் சென்றால், தடை விதிக்க மாட்டோம். மற்றபடி மாவட்டத்தில் மணல் லாரிகள் உட்பட 2,400 லாரிகளையும் ஆக.,18 நள்ளிரவு முதல் 'ஸ்டிரைக்கில்' ஈடுபடுத்துவதென லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை