உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மன்னர் கல்லூரியில் கல்லூரிகளுக்கான "கோ கோ போட்டி

சிவகங்கை மன்னர் கல்லூரியில் கல்லூரிகளுக்கான "கோ கோ போட்டி

.சிவகங்கை : அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர், ஆடவர் 'கோ கோ' போட்டி துவக்க விழா சிவகங்கையில் நடந்தது.மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடந்த விழாவில், போட்டியை இளங்கோ டி.எஸ்.பி., துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் புல்டன் ஜோஸ் நியூமேன் தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர் ஜெகந்நாதன், நிதியாளர் பார்வதி, கண்காணிப்பாளர் நவநீதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 கல்லூரிகளில் இருந்து மகளிர் அணிகளும், 7 கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் அணியும் பங்கேற்கின்றன.போட்டிகளில் வெற்றி பெறும் கல்லூரி அணிகளுக்கான இறுதி போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு பல்கலை., அளவில் பரிசு வழங்கப்படும். உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) பொன்ராம், போட்டி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை