உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து

திருப்புவனம் : திருப்புவனம் பழையூரில் உயிரை பறிக்கும் வகையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால்விவசாயம் செய்ய முடியாமல் விளை நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.திருப்புவனத்தில் குடியிருப்புகள், விளை நிலங்களில் மின்கம்பிகள் தலை தட்டும் உயரத்தில் செல்கிறது.பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டிஅதிகாரிகள் சரிசெய்வதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். உழுவதற்கு, விதை நடுவதற்கு இடையூறாக மின்வயர்கள்செல்வதால் விளை நிலங்கள் தரிசாக கிடக்கின்றது.பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்கம்பிகளை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை