உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் நவரத்தின கற்கள் விற்ற கும்பலிடம் வழிப்பறி

சிவகங்கையில் நவரத்தின கற்கள் விற்ற கும்பலிடம் வழிப்பறி

பழையனூர் : சிவகங்கை மாவட்டம் பழையனூரில் நவரத்தினக்கல் வாங்கச்சென்ற கும்பலிடம் 20 லட்ச ரூபாய் வழிப்பறி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பழையனூர் அருகே பத்துப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நவரத்தினக்கற்கள் வைத்துள்ளார். இவரிடமுள்ள வைரக்கற்கலை 20லட்ச ரூபாய்க்கு விற்பதாக, வேலாங்குளத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.இவற்றை வாங்குவதற்காக மதுரையில் வசிக்கும், ராஜஸ்தான் சேட், புரோக்கருடன் கடந்த வாரம் இங்கு வந்துள்ளார். ஸ்டேஷன் அருகே உள்ள சந்தவழியான் கோயில் அருகே பேரம் நடந்துள்ளது.இதற்காக, மதுரையை சேர்ந்த ராஜஸ்தான் சேட் 20 லட்ச ரூபாயுடன் வந்துள்ளார். இதை நோட்டமிட்ட 10 பேர் கும்பல்,அவர்களை வழிமறித்து தாக்கியதோடு, பணத்தை வழிப்பறி செய்து தப்பினர்.பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தை மூடிமறைக்கும் விசயத்தில் பழையனூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ரகசிய விசாரணை நடத்த, போலீசாருக்கு சிவகங்கை பன்னீர்செல்வம் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை