உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயரழுத்த மின்சப்ளையால் தாயமங்கலத்தில் "டிவிக்கள் பழுது

உயரழுத்த மின்சப்ளையால் தாயமங்கலத்தில் "டிவிக்கள் பழுது

இளையான்குடி : தாயமங்கலத்தில் திடீரென ஏற்பட்ட மின் உயர் அழுத்தத்தால் வீடுகளில் இருந்த டிவி., க்களும் , டியூப் லைட்களும் பழுதானது. கடந்த வாரம் தாயமங்கலம் , தடியமங்கலம் , கலைக்குளம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பகலில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதோடு இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதே நிலை மூன்று நாட்கள் நீடித்ததால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.அதன் பின் மின் விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மின் உயர் அழுத்தம் ஏற்பட்டதால் தாயமங்கலம்,சாத்தமங்கலத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவிக்கள் பழுதானது.வீடு, கடைகளில் இருந்த டியூப் லைட்கள் வெடித்து சிதறியது.அடிக்கடி மின் தடை ஏற்படுவதை சரி செய்வதோடு மின் விநியோகம் சீராக இருப்பதற்கும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ