உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடைந்த பள்ளி கட்டடம் அகற்றக் கோரிக்கை

சேதமடைந்த பள்ளி கட்டடம் அகற்றக் கோரிக்கை

திருப்புத்தூர் : திருப்புத்தூர் தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கைவிடப்பட்டு பல ஆண்டுகளாகியும் இடிக்கப்படாமல் உள்ள கட்டடத்தை அகற்ற பெற்றோர் கோரியுள்ளனர்.7 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியின் இருவகுப்பறை கட்டடம் சேதமடைந்து பயன்படாமல் போனது.கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுஅதில் வகுப்புகள் செயல்படத் துவங்கியது. இருப்பினும் கைவிடப்பட்ட கட்டிடம் இன்னமும் இடிக்கப்படவில்லை. மாணவர்கள் இதில் விளையாடவும், பொதுமக்கள் அதில் நிற்கவும் செய்கின்றனர்.சேதமடைந்த கட்டிடம் எப்போதும் விழலாம் என்பதால் விபத்து வாய்ப்புள்ளது. இதனால் இக்கட்டிடத்தை அகற்ற பெற்றோர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை