உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி

இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி

சிவகங்கை : சிவகங்கையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடந்தது.புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் செல்லம் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சுபாஷினி, சண்முகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர்கள் சேக்கப்பன், மனோகரன் வரவேற்றனர். மாவட்ட அளவில் உள்ள அரசு, உதவி பெறும், தனியார் நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.இதில், சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து அதன் மூலம் மின் சாதனங்களை இயக்குதல், இயற்கையை காப்பதன் அவசியம்,அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ பற்றும் போது தகவலை வெளிக்கொண்டு வரும் 'அலாரம்' போன்று பல்வேறு கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது: மாவட்ட அளவில் நடக்கும் இக்கண்காட்சியில் பங்கேற்கும் கண்டுபிடிப்புகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து, அவற்றில் 5 சதவீத கண்டுபிடிப்புகளை தயாரித்த மாணவர்களை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்புவோம். அங்கு தேர்வாகும் மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்பர் என்றார். ஒருங்கிணைப்பாளர்கள் புனித ஜஸ்டின் பள்ளி தலைமை ஆசிரியை லூசியம்மாள், மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை