உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 91 பேருக்கு மாறுதல்

உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 91 பேருக்கு மாறுதல்

சிவகங்கை : சிவகங்கையில் உயர்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் 91 பேருக்கு மாறுதல் உத்தரவை,முதன்மை கல்வி அலுவலர் செல்லம் வழங்கினார்.மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்கள் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் கவுன்சிலிங் நடந்தது. இதில், மாவட்டத்திற்குள் மாறுதல் கோரி 253 ஆசிரியர்கள் பங்கேற்றதில், 56 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரி 83 பேர் பங்கேற்றதில், 35 பேருக்கும் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள் சுபாஷினி, சண்முகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேக்கப்பன், மனோகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை