மேலும் செய்திகள்
தொழிலாளி படுகொலை
07-Sep-2025
மானாமதுரை: மானாமதுரை அருகே, 'மைக் செட்' தொழிலாளியை கொலை செய்த சிறுவன் உட்பட, ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சங்கமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் புதுமனை புகுவிழாவிற்காக, 'மைக் செட ் ' போடும் பணியில் நேற்று முன்தினம் காளீஸ்வரன் ஈடுபட்டிருந்தார். பழிக்குப்பழியாக கொலை செய்யும் நோக்கத்தில், அங்கு மூன்று டூ - வீலர்களில் எட்டு பேர் வந்தனர். அவர்கள் தேடி வந்த நபர் அங்கு இல்லாததால், அவரது நண்பரான காளீஸ்வரனை வெட்டி கொன்றனர். இக்கொலையில் ஈடுபட்டதாக, மானாமதுரை, கீழப்பசலையைச் சேர்ந்த சுஜித், 21, நரேஷ், 19, முத்துராமலிங்கம், 23, நிதீஷ் கண்ணன், 19, கனீஷ்குமார், 21, மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். காளீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம், வேலை வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் வி.சி., கட்சியினர் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
07-Sep-2025