மேலும் செய்திகள்
அடாவடி ஆட்டோ ஓட்டுனர் கைது
09-May-2025
பிரச்னையும் தீர்வும்
03-May-2025
திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தட்டான்குளத்தில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் புகை கிளம்பியதால் மீட்க சென்றவர்கள் ஓடினர்.நேற்று மாலை நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் முன்னால் சென்ற கரும்பு லாரியை முந்த முயன்ற போது சரக்கு வேன் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.சரக்கு வேனில் இருந்தவர்களை மீட்க அருகில் இருந்தவர்கள் ஓடினர். அப்போது சரக்கு வேனில் இருந்து புகை கிளம்பியதால் காப்பாற்ற சென்றவர்கள் சிதறி ஓடினர். வாகன ஓட்டுனர்கள் சிலர் விபத்திற்குள்ளான வேனின் பேட்டரி இணைப்பை துண்டித்த உடன் புகை நின்றது. அதன்பின் வேனில் இருந்தவர்களை மீட்டனர். விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் இல்லை.
09-May-2025
03-May-2025