உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூவந்தியில் மண் மாதிரி சேகரிப்பு

பூவந்தியில் மண் மாதிரி சேகரிப்பு

பூவந்தி; பூவந்தியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களில் இருந்து மண் மாதிரிகள் மானிய கட்டணத்தில் பரிசோதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் மண்ணிற்கு ஏற்ற பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வள பரிசோதனை மானியத்தில் பரிசோதிக்கப்படுகிறது. மண் பரிசோதனை செய்து மண்ணின் சத்திற்கு ஏற்ற உரம் இடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.இந்தாண்டு ஆயிரத்து 500 விவசாயிகளின் நிலங்களில் மண் பரிசோதனை செய்ய 30 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்த விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை நேற்று பூவந்தியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விழாவிற்கு இணை இயக்குனர் தனபாலன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் விஜயா வரவேற்றார். தர கட்டுப்பாடு உதவி இயக்குனர் பரமேஸ்வரன், நீர்ப்பாசன சங்க தலைவர் மாரி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை