உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளிகளுக்கான சிறப்பு கல்வி கட்டண தொகை ரூ.16.38 கோடி ஒதுக்கீடு சிவகங்கைக்கு ரூ.85.85 லட்சம்

பள்ளிகளுக்கான சிறப்பு கல்வி கட்டண தொகை ரூ.16.38 கோடி ஒதுக்கீடு சிவகங்கைக்கு ரூ.85.85 லட்சம்

சிவகங்கை,:அரசு,உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) வசூலிப்பது ரத்தானதால், அதற்கான நிதி இழப்பை ஈடு செய்ய அரசு ரூ.16.38 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சிவகங்கைக்கு ரூ.85.85லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களிடம் சிறப்பு கல்வி கட்டணம் வசூலிக்கும் முறை 2008-- - 2009 ம் கல்வி ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இம்மாணவர்கள் சேர்க்கைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நிதி இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஆண்டு தோறும் அந்தந்த பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இக்கல்வி ஆண்டிற்காக(2025-- 2026) தமிழக அளவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளி களில் மாணவர்கள் சேர்க்கைக்கான சிறப்பு கட்டண நிதியாக ரூ.16 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 846 ஐ அரசு அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு விடுவித்துள்ளது. இதில்அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.85 லட்சத்து 85 ஆயிரத்து 927 ம், குறைந்த பட்சமாக பெரம்பலுார் மாவட்டத்திற்கு ரூ.9 லட்சத்து 96 ஆயிரத்து 246 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்நிதியை அந்தந்த பள்ளிகளுக்கு விடுவித்து முதன்மை கல்வி அலுவலர்கள் அக்.,31க்குள் அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ