திருப்புத்துாரில் வசந்த பெருவிழா துவக்கம்
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் அம்மனுக்கு காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது.இக்கோயிலில் ஏப்.17ல் பூச்சொரிதல் விழா துவங்கி நேற்று அதிகாலை தீபாராதனையுடன் நிறைவடைந்தது. நேற்று மாலை மூலவருக்கும், சிம்மம் கொடி படத்திற்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜை நடந்து அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்ட விழா துவங்கியது. தொடர்ந்து பத்துநாட்கள் வசந்தப் பெருவிழா நடைபெறும். தினசரி இரவில் அம்பாள் பவனி நடைபெறும்.ஏப்.20ல் பொங்கல் விழா, ஏப்.22 ல் பால்குடம், ஏப்.26ல் அம்மன் ரத ஊர்வலம், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு, இரவில் தெப்பத் திருவிழா, தீப வழிபாடு நடைபெறும்.