தர்மம் செய்வதை தடுக்க க்கூடாது இலக்கியமேகம் சீனிவாசன் பேச்சு
தேவகோட்டை: தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் இலக்கியமேகம் சீனிவாசன் பொன்மழை என்ற தலைப்பில் பேசியதாவது: ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் என்ற பாடலை தமிழில் பொன்மழை என்று எழுதினார். பொன்மழை பாடலை பாடினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். பாரதிக்கு பின் சிறந்த கவிஞர் கண்ணதாசன். கவிதை எழுதுவதில் மட்டுமின்றி கண்ணதாசன் துாயமனம் படைத்தவர். கவியரசர் என்று கூட போடாதவர். தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்வதை யாரும் தடுக்க கூடாது. தர்மம் செய்வதையும் மனமுவந்து வழங்க வேண்டும். உதவி கேட்டு மற்றொரு இடத்தில் கேட்காத அளவில் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்வது பிறப்பிலேயே வரவேண்டும். நாயன்மார்களுக்கு இதயத்தில் இருந்து வந்தது தர்மம் செய்வது. வெளியே தெரியாமல் தர்மம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். தமிழில் மட்டுமே சொல்லப்படுவதால் வெளி உலகுக்கு தர்மம் செய்வது தெரியாமல் போய்விட்டது. வீடு தோறும் பொன்மழை புத்தகத்தை வைத்து தினமும் படிக்கவேண்டும். செல்வம் வளரும் என்றார்.