ஆற்றில் கிடந்த உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் கிடந்த விவகாரத்தில் நில அளவை துறை ஊழியர் முத்துகுமரனை போலீசார் கைது செய்தனர். 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் குறித்து வழங்கிய மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக.,29ம் தேதி கிடந்தன. தாசில்தார் விஜயகுமார் புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். நில அளவை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் தான் வைகை ஆற்றில் கிடந்ததால் அந்த பிரிவில் பணியாற்றி வரும் 8 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் நில அளவை பிரிவின் வரை படவாளர் மதுரை வண்டியூரைச் சேர்ந்த முத்துகுமரன் 42, என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் ஏ.டி. எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., பார்த்திபன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.