உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில ஹாக்கி போட்டி: புதுக்கோட்டை வெற்றி 

மாநில ஹாக்கி போட்டி: புதுக்கோட்டை வெற்றி 

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று மாநில ஹாக்கி போட்டி துவங்கியது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், கோவில்பட்டி, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை ஊர்களில் இருந்து 22 அணிகள் பங்கேற்க உள்ளன. நேற்று மாலை துவங்கிய போட்டியில் சிவகங்கை அணியும், புதுக்கோட்டை நண்பர்கள் கழக அணியும் விளையாடின.இதில், 4:0 கோல் கணக்கில் சிவகங்கை அணியை, புதுக்கோட்டை வென்றது. ஜன., 7 வரை போட்டி நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை