உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அணைக்கரைப்பட்டியில் மாநில கபடி போட்டி

அணைக்கரைப்பட்டியில் மாநில கபடி போட்டி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் மாநில கபடி போட்டி நடந்தது. சித்தி விநாயகர் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் வள்ளல் பாரி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம்ஆலவயல் அணியும், இரண்டாம் பரிசை திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி அணியும், மூன்றாம் பரிசை மதுரை மாவட்டம் பட்டூர் அணியும், நான்காம் பரிசை விழுப்புரம் மாவட்டம் சாத்தம்பாடி அணியும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை