உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை காலத்தில் கற்துாண் விலை உயர்வு

மழை காலத்தில் கற்துாண் விலை உயர்வு

திருப்புவனம்: மழை காலம் தொடங்கி யுள்ள நிலையில் திருப்பு வனத்தில் கல் தூண்கள் விலை அதிகரிப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். சிவகங்கை மாவட்டத் திலேயே திருப்புவனம் வட்டாரத்தில்தான் கால் நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. மடப் புரம், மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, மாடு, கோழி, எருமை, வாத்து, முயல் உள்ளிட்டவைகள் வளர்க்கப் படுகின்றன. மழை காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என கால்நடைத்துறை அறிவித்துள்ளது. கால் நடைகளை பாதுகாப்பாக அடைப்பதற்கு கிராமங்களில் கல்தூண்களை பயன்படுத்தி கொட்டகை அமைப்பார்கள், பெரும்பாலும் மழை காலங்களில்தான் கொட்டகை பயன்பாடு இருக்கும். மற்ற நாட்களில் வெட்ட வெளியில்தான் தான் கட்டி வைத்திருப்பர். கால்நடைகளுக்கான கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் ஆறு முதல் 16 கல்தூண்கள் வரை தேவைப்படும். கல்தூண்கள் உயரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு ஒரு அடி ரூ.60 என விற்றனர். இந்தாண்டு ரூ.75 ஆக உயர்ந்துவிட்டது. இதனால் கொட்டகை அமைப் பதற்கான செலவினம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை