ஆத்தங்குடி, முத்துப்பட்டினத்தில் தண்ணீரில் மிதக்கும் வீதிகள்
காரைக்குடி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக காரைக்குடி செட்டிநாடு பகுதி உள்ளது. ஆத்தங்குடி, முத்துப்பட்டினத்தில் பிரம்மாண்ட பங்களாக்கள், ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள் தயாரிப்பு, ஆத்தங்குடி கூடைகள் என ஏராளம் இப்பகுதியின் அடையாளமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. அகலமான சாலை இல்லாததால் சுற்றுலாவிற்கு வருவோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தவிர வீதிகள் பலவும் மண் சாலையாக காட்சியளிக்கிறது. முத்துப்பட்டினம் லோகநாயகி அம்மன் கோயில் செல்லும் வீதி, பிள்ளையார் கோயில் வீதி உட்பட பல வீதிகள் மண்சாலையாக காட்சியளிப்பதோடு தண்ணீர் தேங்கி குளம் போல் கிடக்கிறது.