உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காலை உணவுத்திட்ட பொருட்கள் பெற அலைச்சல்: சுய உதவிக்குழுவினர் அவதி

காலை உணவுத்திட்ட பொருட்கள் பெற அலைச்சல்: சுய உதவிக்குழுவினர் அவதி

சிங்கம்புணரி: தமிழகத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 35 ஆயிரம் பள்ளிகளில் பயிலும் 20.73 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு காலை உணவாக உப்புமா, கிச்சடி, பொங்கல் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான உணவு வழங்கப்படுகிறது.சிங்கம்புணரி ஒன்றியத்தில் 67 பள்ளிகளில் உணவு சமைத்து வழங்க தேவையான பொருட்கள் மகளிர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இப்பொருட்கள் ஒட்டுமொத்தமாக சிங்கம்புணரி, பிரான்மலை, ஏரியூர், சூரக்குடி ஆகிய மையங்களில் இறக்கி வைக்கப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இங்கு வந்து பொருட்களை எடுத்துச் சென்று சமைக்க வேண்டியது. ஏற்கனவே இத்திட்டத்தில் சமையல் பணியில் ஈடுபடுவோருக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படும் நிலையில், தினமும் உணவு பொருட்களை வந்து எடுத்து செல்லும்போது அவர்களுக்கு பயண செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. எனவே காலை உணவு திட்டத்துக்கான அனைத்து பொருட்களையும் பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விநியோகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை