கலைத் திருவிழா போட்டி கலக்கிய மாணவர்கள்
எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியம் புழுதிபட்டியில் குருவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் திருக்குறள் ஒப்புவித்தல், களிமண் பொம்மைகள் செய்தல், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போன்ற 18 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் 15 பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளை புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ் சாலமன் தலைமையேற்று நடத்தினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.