உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்

மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் மழைக்கு ஒழுகும் ஓட்டு கட்டடத்தில் வகுப்பறை நடப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 8 வகுப்புகள் உள்ள நிலையில் கான்கிரீட் கட்டடம் பற்றாக்குறையாக உள்ளதால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் 2 வகுப்பு நடத்தப்படுகிறது. இக்கட்டடத்தின் கூரை மழைக்காலங்களில் ஒழுகுகிறது. உள்ளே அமர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பழைய ஓட்டு கட்டடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி