உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தவிப்பு பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளின்றி நெருக்கடியில் மாணவர்கள்

தவிப்பு பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளின்றி நெருக்கடியில் மாணவர்கள்

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகளின்றி இட நெருக்கடியில் செயல்படுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியகோட்டை, தெக்கூர், பாப்பாங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 20 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் 12 வகுப்பறைகள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 6 வகுப்பறை மட்டுமே உள்ளதால் மாணவர்கள் இடவசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.மாணவர்களின் கல்வித் தரமும் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் நடுவில் தடுப்புகளை வைத்து 2 வகுப்பறைகளாக பாடம் நடத்தி வருவதால் மாணவர்கள் பாடங்களை சரியாக கவனிக்க முடியவில்லை.பெற்றோர்கள் கூறுகையில், பெரியகோட்டை பள்ளி வளாகத்தில் போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தினால் பல நாட்கள் மரத்தடியிலும் வகுப்பறை நடைபெற்று வருகின்றன. மேலும் ஆய்வக வசதிகளும் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு நடைபெறும் நேரங்களில் செய்முறை தேர்வு எழுத மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் போதுமான இட வசதி இருந்தும் இதுவரை புதிதாக கட்டடங்கள் கட்டப்படாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவர்களின் நலன் கருதி பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான புதிய கட்டடங்கள் கட்டி போதுமான வகுப்பறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை