உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள்

படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள்

திருப்புவனம்; திருப்புவனத்தில் அரசு டவுன் பஸ்களில் இடமிருந்தும் மாணவர்கள் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள 173 கிராமங்களுக்கு கிளை பணிமனை மூலம் 42 டவுன் பஸ்களும், திருப்பரங்குன்றம், திருநகர் கிளை மூலம் ஐந்திற்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான கிராமங்களில் இருந்து பள்ளிகளுக்கு செல்ல காலை, மாலை டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. எனினும் மாணவர்கள் பலரும் கூட்டமாக சேர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை சாதனையாக செய்கின்றனர். பஸ்சினுள் இடம் இருந்தாலும் படிகளில் தொங்கி கொண்டு செல்லும் பயணத்தையே விரும்புகின்றனர். தற்போது காற்று பலமாக வீசி வரும் நிலையில் படிகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.பஸ் டிரைவர்கள் கூறுகையில்: போதிய பஸ்கள் இயக்கப்பட்டாலும் மாணவர்கள் வேண்டுமென்றே மேலச்சொரிக்குளம், பிரமனூர், கணக்கன்குடி, ஏனாதி, வெள்ளிகுறிச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பஸ்களில் கூட்டமாக சேர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். தட்டி கேட்டால் கூட்டமாக சேர்ந்து தாக்குகின்றனர், என்றனர். உள்ளூரிலேயே மேல்நிலைப்பள்ளி வரை இருந்தாலும் பஸ் பாஸ் கிடைப்பதால் திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் படிகளில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ