உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்குவரத்து வசதியின்றி பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்

போக்குவரத்து வசதியின்றி பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்

ஒரு கி.மீ.க்குள் துவக்கப்பள்ளி, 3 கி.மீ.க்குள் நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ.க்குள் உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீ.க்குள் மேல்நிலைப்பள்ளி என்று மாணவர்கள் அலையாமல் கல்வி கற்பதற்காக அரசு வரையறுத்துள்ளது. கிராமங்கள் தோறும் பள்ளிகள் பரவலாக உள்ளன. இருப்பினும் சில குக்கிராமங்கள் இதற்கு விதி விலக்காக அமைந்து விடுகின்றன. போதிய போக்குவரத்து வசதியின்றி சில கி.மீ. துாரம் பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.மாவட்ட அளவில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு சில கி.மீ.துாரம் நடந்து துவக்க வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.திருப்புத்துார் பகுதியில் சோழம்பட்டி, ஜெயமங்கலம், மேலையான்பட்டி, வாணியம்பட்டி, மாங்குடி போன்ற இடங்களில் இந்நிலை காணப்படுகிறது. வாணியம்பட்டியிலிருந்தும் மாணவர்கள் இப்பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.கண்மாயில் நீர் இருப்பதால் வாணியம்பட்டி மாணவர்கள் ரோட்டில் நடந்து செல்வதாகவும், இல்லாவிட்டால் கண்மாய் வழியாக குறுக்குப்பாதையில் எளிதாக பள்ளி செல்ல முடியும்' என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ மூலம் இந்த மாணவர்கள் பள்ளி வந்து, செல்ல ஆசிரியர்கள் உதவியுள்ளனர். அதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இதற்கு நிதி அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தற்போது நடந்து வர வேண்டியுள்ளது. ஆனால் காரையூர் முகாமிலிருந்து சோழம்பட்டிக்கு செல்ல பயணப்படி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.5 பள்ளிகளுக்கு விண்ணப்பித்தும் 2 பள்ளிகளுக்கு மட்டும் பயணப்படி கிடைத்தது. நிதிப்பற்றாக்குறை அதற்கு காரணமாக கூறப்படுகிறது.அரசு 6 லிருந்து 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அளிக்கிறது.அதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாதுகாவலர் பாதுகாப்பு மற்றும் பயணப்படியாக ரூ 400 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.அதே போல் பள்ளிக்கு பக்கத்து கிராமத்திலிருந்து வரும் துவக்க வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியதும் அவசியமாகும். மாவட்ட அளவில் போக்குவரத்து வசதியில்லாத துவக்க பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்கினால் தான் கல்வி இலக்கை முழுமையாக நாம் எட்ட முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karuthu kirukkan
நவ 27, 2024 08:50

ஊருக்கு ஊர் மலிவு விலை மதுக்கடைகளைவிட , குழந்தைகளின் பள்ளி கல்வி தான் முக்கியம்... அரசும் அரசு கல்வித்துறை அதிகாரிகளும் கல்விக்கண் காமராஜரின் வரலாற்றை திரும்பி பார்க்கவும்


புதிய வீடியோ