உள்ளூர் செய்திகள்

போதையில் தற்கொலை

சிங்கம்புணரி: மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முத்துச்சாமிபட்டியைச் சேர்ந்தவர் அழகு மகன் பால்பாண்டி 35, தொழிலாளி. இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, சிவரஞ்சனி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பால்பாண்டிக்கு மதுப்பழக்கம் உள்ள நிலையில் நவ. 3ஆம் தேதி இரவு மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு மது அருந்திய பால்பாண்டி, எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் உள்ள புலிக்கண்மாயில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை