உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் கோடை கொண்டாட்டம்

சிவகங்கையில் கோடை கொண்டாட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான கோடை கொண்டாட்ட விழாவை கலெக்டர் துவக்கி வைத்தார்.கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக மே 2 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விழா கொண்டாட்டம் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளியில் நடைபெறுகிறது. நேற்று இந்த விழாவை சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) விஜயசரவணக்குமார், தாசில்தார் சிவராமன், வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சம்பத்குமார் பங்கேற்றனர்.கலெக்டரின் உதவியாளர் (கல்வி) ஜெயப்பிரகாஷ் ஏற்பாட்டை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை