உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடைகால நீச்சல் பயிற்சி

கோடைகால நீச்சல் பயிற்சி

சிவகங்கை: சிவகங்கை விளையாட்டு திடலில் ஏப்., 1 முதல் ஜூன் 8 ம் தேதி வரை கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இப்பயிற்சி முகாம் 5 கட்டங்களாக ஒரு கட்டத்திற்கு 12 நாட்கள் வீதம் நடைபெறும். பயிற்சி பெற விரும்பும் சிறுவர்கள் குறைந்தது 4 அடி உயரம் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக (12 நாளுக்கு) ரூ.1500 செலுத்த வேண்டும். இது தவிர தினசரி நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் குறித்து 74017 03503 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் சென்றும் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை