உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.வைரவன்பட்டியில் புரவி எடுப்பு

தி.வைரவன்பட்டியில் புரவி எடுப்பு

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே தி.வைரவன்பட்டியில் தண்ணீர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா 28 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.புரவி எடுப்பை முன்னிட்டு கிராமத்தினர் பிடிமண் கொடுத்தனர். மே 23ல் சேங்காய் வெட்டுதல் நடந்தது. மே 30ல் புரவி கட்டி புரவிகளுடன் கிராமத்தினர் ஊர்வலமாக சவுக்கை பொட்டலுக்கு வந்தனர். தொடர்ந்து புரவிகளுக்கு தீபாராதனை நடந்தது. நேற்று மாலை பொட்டலிலிருந்து கிராமத்தினர் புரவிகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு புரவிகளை அமர்த்தி சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !