உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள் சங்க மாநாடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள் சங்க மாநாடு

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் பாண்டி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் வரவேற்றார். இந்திய தொழிற் சங்க மாவட்டத் தலைவர் வீரையா தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பெரியசாமி நிதிநிலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்டத் தலைவர் சேகர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி பேசினர். புதிய மாவட்ட தலைவராக லுாயிஸ் ஜோசப், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர்கள் பாஸ்கரன், குமரேசன், கார்த்திக், பயாஸ் அகமது, பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலாளர்கள் மலர்விழி, ேஷக் அப்துல்லா, கலைச்செல்வம், ஷகீலா, சிவா, மாவட்ட தணிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி