உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வரி நிலுவை தள்ளுபடி: பேரூராட்சியில் முடிவு

வரி நிலுவை தள்ளுபடி: பேரூராட்சியில் முடிவு

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பால சுப்ரமணியன் வர வேற்றார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் 2015ல் நடந்த தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து சேதமாகின. இதில் காலி இடங்கள், கட்டடங்களுக்கான வரி ஆவணங்களும் அடக்கம். ஒவ்வொரு இடங் களுக்கும் வரி குறித்த எந்த வித ஆவணங்களும் கண்டறிய முடியாத நிலையில் இவை வருடம் தோறும் பேரூராட்சியின் வரி வசூல் பாக்கி தொகையாகவே கணக்கிடப் படுகிறது. எனவே கண்டறிய முடியாத வரி நிலுவைகளை தள்ளுபடி செய்வது, மூன்று மாத வரவு, செலவு, பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ