உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதென தீர்மானம்  ஆசிரியர், ஊர்நல அலுவலர் சங்கம்  

சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதென தீர்மானம்  ஆசிரியர், ஊர்நல அலுவலர் சங்கம்  

சிவகங்கை: பழைய பென்ஷன், மருத்துவ காப்பீடு கோரி மார்ச் 7 ல் சென்னை சமூக நலத்துறை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடுவதென சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.சிவகங்கையில், தமிழ்நாடு அரசு ஆசிரியர், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காளைலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜலட்சுமி, கலையரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க மாநில தலைவர் சங்கர்பாபு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில் தேர்தலின் போது அறிவித்தபடி பழை பென்ஷன் அறிவிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியத்திற்கான உத்தரவை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 7 ல் சென்னை சமூக நலத்துறை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடுவதென தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நிர்வாகி கவுசல்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை