மேலும் செய்திகள்
'பயோடெக்' தொழில் பூங்கா ஆலோசனை நிறுவனம் தேர்வு
18-Dec-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில், விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்காக, 4 கோடி ரூபாயில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. நாடு முழுதும் விமான சேவையை விரிவுபடுத்த, அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் புதிய விமான நிலையங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது. இதனால், நம் நாட்டில் விமான சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள, 800ல் இருந்து, அடுத்த சில ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க உள்ளன. எனவே, விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம், சர்வதேச தரத்தில் விமானத்தை ஓட்ட பயிற்சி அளிக்கும், விமான பயிற்சி நிறுவனங்கள் மிக குறைவாகவே உள்ளன. இதனால், நம் நாட்டு இளைஞர்கள் விமான பயிற்சி பெற பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடு களுக்கு சென்று, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்கின்றனர். எனவே, விமான பயிற்சி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், குறைந்த செலவில் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கவும், தமிழகத்தில் விமான பயிற்சி நிலையத்தை அமைக்கும் பணியில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போது, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கானாடுகாத்தானில் விமான பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள செட்டிநாடு ஏரோநாடு விமான போக்குவரத்து மையத்தில், 4 கோடி ரூபாயில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், பொது - தனியார் கூட்டு முயற்சியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது. இதுவே, விமான பயிற்சிக்கு என்று, தனி விமான ஓடுபாதையுடன் அமைக்கப்படும் விமான பயிற்சி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
18-Dec-2025