உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் கோயில் கடை ஏலம் ரத்து

தாயமங்கலம் கோயில் கடை ஏலம் ரத்து

இளையான்குடி, - தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும்.இந்தாண்டு திருவிழாவையொட்டி அமைக்கப்படும் கடைகளுக்கான ஏலம் 4 முறை நடைபெற்ற நிலையில் ஏலதாரர்கள் ஏலம் எடுக்காததால் 4 முறையும் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று 5வது முறையாக ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், ஆய்வர் அய்யனார், திருக்கோவில் பணியாளர்கள் தலைமையில் நடைபெற்றது. ஒரு கோடியே 68 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் 4 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். இதில் அபிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர்ரூ. 71 லட்சத்து 200க்கு ஏலம் கேட்டிருந்தார்.ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏலத்தொகை குறைவாக இருப்பதாக கூறி இந்த ஏலத்தையும் 5வது முறையாக ரத்து செய்தனர்.மீண்டும் மற்றொரு தேதியில் ஏலம் நடைபெறும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ