உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடகிழக்கு பருவமழை தொடக்கம் கால்வாயை துார்வாரிய விவசாயிகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம் கால்வாயை துார்வாரிய விவசாயிகள்

திருப்புவனம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பிரமனுார் பகுதி விவசாயிகள் கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் பிரமனுார் கண்மாய் பாசன வசதி பெறுகிறது. தட்டான்குளத்தில் இருந்து ஏழு கி.மீ., துாரத்திற்கு பிரமனுார் கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் மழை தண்ணீர் வைகை ஆற்றில் வந்த வண்ணம் உள்ளது. மழை தண்ணீரை விவசாயிகள் கால்வாய்களில் திருப்பி கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வரத்து கால்வாய்களில் செடி, கொடிகள், கழிவு நிரம்பி இருப்பதால் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் புதுாரில் தொடங்கி நான்கு கி.மீ., துாரத்திற்கு துார் வாரி உள்ளனர். இதனால் மழை தண்ணீர் விரைவாக கண்மாயை சென்றடையும்.துார் வாரும் பணியை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை