உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொடுக்கல் வாங்கல் பிரச்னை; வாலிபருக்கு கத்திக்குத்து

கொடுக்கல் வாங்கல் பிரச்னை; வாலிபருக்கு கத்திக்குத்து

தேவகோட்டை : தேவகோட்டை மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் 37., இவருக்கும் ராம்நகரில் வசிக்கும் திருப்பதி மனைவி அகிலா 40., வுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. நேற்று மாலை அகிலா தனது நண்பரான ராமநாதபுரம் அருகே உள்ள கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் காமாட்சியுடன் சரவணன் வீட்டுக்கு சென்றார். இருவரும் சரவணனை வெளியே அழைத்து தகராறு செய்ததோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தியுள்ளனர். தடுத்த சரவணனின் கையில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் கொடுத்த புகாரில் அகிலா, காமாட்சியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி